Home > செய்திகள் > ஜெர்மன் நாட்டுப் பெண்ணை கடித்துக்குதறிய சுறா: வெளியான அதிர்ச்சிக் காட்சி (வீடியோ)

ஜெர்மன் நாட்டுப் பெண்ணை கடித்துக்குதறிய சுறா: வெளியான அதிர்ச்சிக் காட்சி (வீடியோ)

எகிப்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவரை சுறா ஒன்று கடித்துக் குதறியது. Red Sea கடல் பகுதியில் அந்த 42 வயது சுற்றுலாப்பயணி நீந்திக்கொண்டிருக்கும்போது, இந்த திகில் சம்பவம் நடைபெற்றது.

சுறா ஒன்று அந்த பெண்ணின் தோள் பகுதியைக் கவ்வ, நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் அந்த பெண்ணை சுறாவிடம் மீட்க போராடும் குறுகிய நேர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் அந்த சுறாவை இருமுறை உதைத்துத் தள்ளும் நேரத்தில், மற்ற மூன்று நீச்சல் வீரர்கள் அந்த பெண்ணை படகில் ஏற்றியுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக தையல் போடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் நீந்துவதற்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள சுறாக்களின் செயல்பாடுகளில் ஏற்படுள்ள மாற்றம் தொடர்பாக ஆராய அறிவியலாளர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

You may also like
ஜெர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம்

Leave a Reply