Home > செய்திகள் > தற்கொலை தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல! – முக ஸ்டாலின் ஆவேசம்!

தற்கொலை தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல! – முக ஸ்டாலின் ஆவேசம்!

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரை மாணவி நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக மன உளைச்சலால் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் ”நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதை அவர்களது மரணங்களே உணர்த்துகின்றன. மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வல்ல.. நீட் என்பது ஒரு தேர்வே அல்ல” என்று கூறியுள்ளார்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply