Home > செய்திகள் > சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது

சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்ப்பது என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் , “மூன்று ஆண்டுகால பணிக்காலத்தில் துணைவேந்தர் சுதந்திரமாக செயல்படலாம்; அதற்கு தடையில்லை. துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும்.

உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு கூட்டணி கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கின்றனர்.

துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின் பேச்சு
மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?
துணை வேந்தரான சூரப்பாவிற்கு
அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Leave a Reply