Home > செய்திகள் > தமிழ்நாடு அரசின்அரியர் தேர்வு ரத்து ஆணை தவறானது – ஏஐசிடி தலைவர்

தமிழ்நாடு அரசின்அரியர் தேர்வு ரத்து ஆணை தவறானது – ஏஐசிடி தலைவர்

அரியர் தேர்வை ரத்து செய்த முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், அரியர் தேர்வுக்காகப் பணம் கட்டி காத்திருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள் வரவேற்பும், கல்வியாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், ஏஐசிடிஇ, யுஜிசி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும், அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கூறி வந்தனர்.

இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து முடிவு தவறானது என்று கூறியுள்ளார்.

அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கியது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தனக்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதும்போது இந்தக் கருத்தை நான் தெரிவித்துள்ளேன் என்று அண்ணா பல்கலைக்குக் கடிதம் அனுப்பியதை தனதுபேட்டியில் உறுதி செய்துள்ளார் அனில் சஹஸ்ரபுதே.

அரியர் தேர்வு ரத்து தொடர்பாக ஏஐசிடிஇ தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது.
முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.
அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை -அமைச்சர் அன்பழகன்
பாகுபலி ஹீரோவான எடப்பாடி கே.பழனிச்சாமி

Leave a Reply