Home > செய்திகள் > தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழக மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ஜுன் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த ஐசிஎம்ஆரின் அங்கமான தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் ஜூன் மாத இறுதியிலேயே உச்சம் எட்டப்பட்டு அதாவது 3.5 கோடி பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதனால் எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

You may also like
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொது முடக்கம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Leave a Reply