Home > செய்திகள் > இந்தியாவில் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 606 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் தொடக்கம் முதல் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து, தொடர்ந்து 5வது நாளாக, 6வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்து வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் இன்று மீண்டும் ஒரு புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 32,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 606 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.

வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில், 110 நாட்களுக்கு பிறகுதான் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அடுத்த 49 நாட்களில் இந்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது. அதற்கு அடுத்த 5 நாட்களில் 8 லட்சமாக உயர்ந்த இந்த எண்ணிக்கை, நேற்று முன்தின நிலவரப்படி மூன்றே 3 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 9 லட்சத்தை தாண்டியது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளதால், இதே நிலை நீடித்தால், நாளை உறுதியாக 10 லட்சத்தைக் கடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு நிகராக குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இறப்பு, குணமடைந்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 32,695 பேர் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,68,876 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், மொத்த பலி எண்ணிக்கை, நேற்று உயிரிழந்த 606 பேருடன் சேர்த்து 24,915 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 6,12,814 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது, 331146 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply