Home > செய்திகள் > மருத்துவக் கலந்தாய்வு 18ம் தேதிக்குள் தொடங்கும்

மருத்துவக் கலந்தாய்வு 18ம் தேதிக்குள் தொடங்கும்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு மேலாக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.

அதனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இதனையடுத்து விரைந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பலர் ஆளுநரிடம் வலியுறுத்தியதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

இது அரசுப்பள்ளி மாணவர்களிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வு 18ம் தேதிக்குள் தொடங்கும் என்றும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த இட ஒதுக்கீடு மூலமாக 303 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
உள் ஒதுக்கீட்டின் மூலமாக 395 மாணவர்களுக்கு மருத்துவ இடம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்
வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?
”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

Leave a Reply