எல்லோரும் MS தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது பற்றி எழுதுகிறார்கள், புகழ்கிறார்கள், வருந்துகிறார்கள். முகநூல் முழுக்க சென்ற இருநாட்களாக இது பற்றிய பதிவுகளே அதிகம் காணக்கிடைக்கின்றன…
அதிலும் பல கிரிக்கெட் மற்றும் தோனி ரசிகர்களை மிகவும் வேதனைப்படுத்திய விஷயம் என்னவென்றால், இரண்டு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெற வைத்ததுதான்.
ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்ற வகையில் தோனியை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தொழில்முறை விளையாட்டு வீரர்களையும்போல் அவரும் ஒருகட்டத்தில் ஒய்வு பெறத்தான் வேண்டும், ஓய்வு பெற்றார்.
ஆனால், கொஞ்சம் ஆழமாக பார்த்தால், தோனியின் சென்ற ஓராண்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அவருடைய ஓய்வுக்குமான காரணம் அதிர்ச்சியும் ஆச்சரியும் ஊட்டக்கூடியதாக இருக்கிறது.
2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டிதான் தோனி விளையாடிய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி. அதில் அவர் அவ்வளவுக்கு சோபிக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு தோனி அணியில் இருந்து திட்டமிட்டே ஓரங்கட்டப்பட்டார். ஒரு போட்டியில்கூட அவருக்கு ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
உண்ணும் அரசியலிலேயே அரசியல் இருக்கும்போது, காலணி ஆதிக்கத்தின் மிச்சகொச்சமான கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் இருக்காதா என்ன…
ஜூலை மாதம் 2019-ல் உலகக்கோப்பை முடியும் தருவாயில்தான் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சியான பாஜக மீதும் அதன் அப்போதைய முதலமைச்சர் ரகுபர் தாஸ் மீதும் மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவிய சூழல். பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அவ்வளவாக இல்லை என்று எல்லா ஊடகங்களின் களநிலவரமும் உணர்த்தின.
அந்த இக்கட்டான சுழலில் பாஜக கட்சிக்கு அங்கு தேவைப்பட்டது ஒரு பிரபலமான முகம். இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது.
பாஜக அப்போது அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை. பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.
இவையெல்லாம் அப்போது பெரும்பாலான தேசிய ஊடகங்களில் வந்த செய்திகள்,2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை நியமித்து அவர்மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. எந்த மிரட்டலுக்கும் தோனி பணிவதாக இல்லை.
தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் கிடைத்த மக்கள் ஆதரவையும் அங்கீகாரத்தையும் யாருடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் கொடுக்க தோனி விடும்பவில்லை.
இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோனது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அங்கீகாரம் பாஜகாவுக்கு கிடைக்காமல் போனது.
இந்நிலையில் அவர்களின் கோபமும் ஆத்திரமும் தோனியின் மேல் திரும்பியது. இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த சர்வதேச போட்டியிலும் நீ தேர்ந்தெடுக்கப்பட மாட்டாய் என்று BCCI தரப்பிலிருந்து தோனியிடம் தெளிவாக சொல்லப்பட்டது
2020-ம் ஆண்டிக்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து செயலாளர் ஜெய்ஷாவால் இந்திய கிரிக்கெட்டின் சரித்திர நாயகன் தோனி தூக்கி ஏறியப்பட்டார். இவ்வளவு பெரிய சீனியர் வீரருக்கு Grade A வீரருக்கு கண்டராக்ட்கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்குத்தான்.
இந்தியாவே கொண்டாடும் ஒரு வீரன், இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்தவன், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு வழியனுப்பு போட்டிகூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான காரணம் இதுதான்..!
இளைஞர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் உந்துசக்தியாக இருக்கும் ஒரு சிறப்பான விளையாட்டு வீரனுக்கு எந்த நாடும் செய்யாத துரோகம், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் விக்கெட் கீப்பர்களிலேயே தலைசிறந்தவரான தோனிக்கு இழைக்கப்பட்டது வேதனையே.40 வயதை தொடும் நிலையில் ஒரு மிகச்சிறந்த தொழில்முறை விளையாட்டு வீரர் ஓய்வுபெறுவது ஆச்சரியமில்லை. ஆனால் முறையான வழியனுப்புதல்கூட இல்லாமல் அனுப்பப்பட்ட காரணம் தான் எற்புடையதாயில்லை.
தோனியின் எல்லா சாதனைகளும் ஒருநாள் யாரோ ஒருவரால் முறியடிக்கப்படலாம். என்றாலும்… இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற தோனியின் பெருமையை யாராலும், எந்த கொம்பனாலும் ஒருக்காலமும் துடைத்தெறிய முடியாது.
ஆடுகளம் கடந்து அரசியலில் நாகரிகம் காத்த தோனிக்கு வாழ்த்தும் வணக்கமும்.