Home > செய்திகள் > நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!

நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!

2020 ஜனவரி 01—ஆம் தேதி புத்தாண்டு தினம், காலை 8 மணி. முன்னணி செய்தி சேனல் ஒன்றில் ஏழெட்டு டிசைன்களில் ஜோசியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். இந்த வருடம் எப்படி இருக்கும்? என்ற அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “சொல்லுங்க சாமி இந்த வருடம் எப்படி இருக்கும்?” என ஆரம்பித்தார்.

“ஆஹா ஓஹோ… போன வருச ஜாதக பலன்கள் மக்களூக்கு எதிரா இருந்து ரொம்பவே பாடாய்படுத்தியது. ஆனா இந்த வருசம் எல்லாமே ஏற்றம் தான், மக்களின் வாழ்வில் சுபிட்சம் தான். பணம் கொட்டோ கொட்டென கொட்டும், மக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான்”என்றார் ஒரு ஜோசியர்.

அந்தக் கூட்டத்துலயும் ஒரு ஜோசியர், சித்திரை தமிழ்ப்புத்தாண்டு பிறந்தவுடன் பாருங்க நாட்ல எல்லாரும் ஐ ஆம் வெரி ஹேப்பின்னு துள்ளிக்குதிப்பாக”ன்னு போட்டாரு பாருங்க ஒரு போடு, அதான் செம ஹைலைட். அந்த நிகழ்ச்சியில பேசிய எல்லா ஜோசியர்களுமே இதே டைப்ல தான் பேசினார்கள்.

எந்த நேரத்துல அந்த சண்டாளய்ங்க வாயத் திறந்தாய்ங்களோ, மார்ச் மாசமே இந்தியாவுக்கு கொரோனா வந்திறங்கி மக்களை சாகடிச்சி, வாழும் மக்களை நோகடிச்சது தான் மிச்சம்.

இதோ இப்ப இந்த 2021 ஏப்ரல் மாசம் மீண்டும் இந்தியாவில் கொரோனா தாண்டவமாட ஆரம்பிச்சிருச்சு. ஏப்ரல் 10—ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. மே.02—ஆம் தேதி தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு நிலைமை என்னாகுமோ என்ற திக்திக் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

இந்த நேரம் பார்த்து ஒரு சாமியார், புதுசு புதுசா சரடுகளை எடுத்துவிட்டு ஜிங்கிச்சா மங்கிச்சா, மங்கிச்சா ஜிங்கிச்சா ரேஞ்சுக்கு மக்களை குழப்ப ஆரம்பிச்சாட்டாரு. அந்த சாமியா பேரு ராஜகுரு பிரம்மஸ்ரீ குருவாயூர் நம்பூதிரி சுவாமிகள்.

அவரு என்ன சொல்றாருன்னா….

“கொரோனா தொற்று பரவுவதை நிப்பாட்ட அதர்வண வேதத்தில் (அடடே அப்படியா) மருந்தும் மந்திரமும் என குறிப்பிடப்பட்டிருக்கு. அதுப்படி பார்த்தா தரணி ரக்ஷ மகா யாகத்தை நடத்தினால் கொரோனா சுத்தமா வாஷ்—அவுட்டாகிரும். (ஏய் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா டாக்டர்ஸ்)

இந்த யாகத்தை நடத்த பல கோடி ரூபாய் செலவாகும் (அப்படிப் போடு அருவாள) இதுக்காக பல ஆயிரம் கோடி சொத்துக்களை வச்சிருக்கும் இந்துமத சாமியார்கள், மடாதிபதிகளிடம் (இப்பத்தான்யா உண்மைய கரெக்டா பேசிருக்க) கேட்டுப் பார்த்தேன் யாரும் கொடுக்கல. (நீ கேட்டா எப்படிக் கொடுப்பாய்ங்க. நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், ரஞ்சிதா, ஷில்பா ஷெட்டிகள் கேட்காமலேயே அள்ளிக் கொடுப்பாய்ங்க)

தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, டிவிஎஸ் வேணு சீனிவாசன் ஆகியோருக்கு லெட்டர் எழுதிப்பார்த்தேன், யாகம் நடத்துறதுக்கு யாருமே ஹெல்ப் பண்ணல. (ஏன்யா அவய்ங்களுக்கெல்லாம் சுரண்டித் தானே பழக்கம்)
மூவாயிரம் கோடில ராமருக்கு கோவில் கட்டுறதவிட (நாங்களும் இதத்தாம்பு சொல்றோம்) இந்த யாகம் நடத்துறது எவ்வளவோ மேல். இதப்பத்தி பாரதப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கண்டுக்கல (அட நீ வேற ஏய்யா வயித்தெரிச்சல கிளப்புற. அவருக்கு தாடிய வளர்க்கவும் திருக்குறளை மனப்பாடம் பண்ணவுமே நேரமில்ல)

சரி எல்லாரும் போய்த் தொலையட்டும் நாமளே நம்ம பீடத்தின் சார்பில் யாகத்தை நடத்துவோமேன்னு கடந்த வருசம் ஆகஸ்ட் மாசம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே இருக்கும் ஸ்ரீசூரியமங்கலம் அத்வைத வேத பீடத்தின் சப்போர்ட்டில் யாகத்தை ஆரம்பிச்சோம். ஒரு நாளைக்கு சர்வசாதரணமா ஒரு லட்சத்துக்கு மேல செலவு அத்துக்கிட்டுப் போச்சு. ஒரு கட்டத்துக்கு மேல நம்மால முடியல சாமி. ஆனா பாருங்க நாம் யாகம் நடத்திய அந்த 207 நாட்களில் கொரோனா தொற்று குறைஞ்சுக்கிட்டே வந்துச்சு.

இப்ப பார்த்தீங்கன்னா மீண்டும் கொரோனா பீதி கிளம்பிருச்சு. இப்படியே சரடு விட்டுக்கிட்டே வந்தவரு, கடைசியா போட்டாரு பாருங்க ஒரு போடு. “ரஜினி அரசியலுக்கு வரமாட்டாருன்னு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாலேயே நான் கணித்துவிட்டேன்”. இது தான் ராஜகுரு பிரம்மஸ்ரீ குருவாயூர் சூரியன் நம்பூதிரி சுவாமிகள் போட்ட போடு.

ஏய்யா தான் உண்டு தன் சினிமா தொழில் உண்டுன்னு ரஜினியே ஒதுங்கிட்டாரு. அவர ஏய்யா இப்ப இழுக்குறீக?

–சீமராஜா

You may also like
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

Leave a Reply