Home > செய்திகள் > ‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ – டேவிட் வார்னர்

‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ – டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று. இது முடிந்ததும் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறது.

அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன இரு அணிகளும்.

இதற்கான அணிகளும் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். டி20 அணியில் இருந்த தமிழக வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

காயம் காரணமாக, ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார்.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் சொந்த வேலைகாரணமாக கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார்.

அதனால், மீதமுள்ள போட்டிகளை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.

இதில் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடராஜனை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ என ட்விட் செய்து வரவேற்றிருக்கிறார்.

இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடியவர்கள். தனது யாக்கர் பந்து வீச்சால் மிரட்டியதில் வார்னரின் பாராட்டையும் பெற்றவர். இதன்மூலம் புதிய நட்பு உருவாகிவிட்டது.

Leave a Reply