டிக்டாக்கில் 1 கோடியே 18 லட்சம் பாலோயர்களை கொண்டவர் ஷாகேப் கான். இவருடைய பாப்புலாரிட்டி மீது பாஜக மற்றும் அதன் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ரொம்ப நாளாகவே எரிச்சல் இருந்தது.
அந்த எரிச்சலை கொரோனா வைரஸை அவர் பரப்புவதாக புதிய பதிவுகளைப் போட்டு பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பிரதமர் மோடியே பின்பற்றும் பாலா என்பவர் ஷாகேப் கான் குறித்து ஒரு பொய்யான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆனால், ஷாகேப் கான் பிப்ரவரி 6 ஆம் தேதி போட்ட பதிவை வைத்து அவர் மீது கொரோனாவை பரப்புவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ஷாகேப் கான் ஏற்கெனவே பல மோசமான பதிவுகளை பாப்புலாரிட்டிக்காக வெளியிட்டிருக்கிறார். இந்தக் குறிப்பிட்ட பதிவில் அவரும் அவருடைய நண்பரும் பேசி விளையாடிக்கொண்டு வருகிறார்கள். அப்போது ஒரு பெண் மீது அவர் மோதிவிடுகிறார். அந்த பெண் அவரை திட்டுகிறார். உடனே அவருடைய நண்பர், ஷாகேப் கானின் உள்ளங்கையில் எச்சில் துப்புகிறார். அந்த எச்சிலோடு அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கைகுலுக்குகிறார்.
அதாவது எச்சில் துப்பி கொரோனாவை பரப்புவதாக பாலா தனது பதிவில் கூறியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்தால்தான் எச்சில் மூலம் கொரோனா பரவும் என்பது இருக்கட்டும்… அந்த வீடியோ வெளியாகும்போது இந்தியாவில் கொரோனா தொற்று அறிமுகமே ஆகவில்லை. அதுமட்டுமின்றி, தேசிய அளவில் கொரோனா தொற்றுக்கு நடவடிக்கையே எடுக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு பிரச்சனையாகவே ஆகவில்லை.
ஷாகேப் கானின் பதிவை இஸ்லாமியர்கள் மீது புரளி பரப்புவதற்காகவே சங்கிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.