மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, வடக்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மது வாங்குவதற்காக குடிமகன்கள் அலங்காநல்லூரை நோக்கி படையெடுக்கிறார்கள். ஊருக்குள் வெளியூர் குடிகாரர்கள் நடமாட்டம் மக்களை பீதியடையச் செய்கிறது. எனவே அலங்காநல்லூரில் மட்டும் இயங்கும் மூன்று கடைகள் நிரம்பி வழிகின்றன. இது போதாதென்று, நவீன பார் வசதியையும் உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இவற்றை மூடி, அலங்காநல்லூர் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அலங்காநல்லூர் கிராம நிர்வாகிகளும், அனைத்துக் கட்சி பிரமுகர்களும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் மக்களைத்திரட்டி அனைத்துக் கட்சியினர் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.