Home > செய்திகள் > இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதி

இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 108 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,349-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08,784-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

Leave a Reply