Home > செய்திகள் > நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை

நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அடுத்த 12 மணிநேரத்தில் இது அதிதீவிரப் புயலாக வலுவடைவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக்வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You may also like
நிவர் நிவாரணம் துரிதப்படுத்தபடவேண்டும் – மு.க.ஸ்டாலின்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
நிவர் புயலால் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்!! – பிரதம மோடி
தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை

Leave a Reply