Home > செய்திகள் > தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை: நிபந்தனைகளுடன் செயல்பட ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை: நிபந்தனைகளுடன் செயல்பட ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று நோயின் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தோற்றலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் பரவி பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை சிறிது சிறிதாக தளர்த்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டு இருந்த அரசின் மதுபான கடைகளை நாளை முதல் திறப்பதற்காக நேற்று முன்தினம் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணை வெளியிட்டதில் இருந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது தமிழக வறுமையில் தத்தளித்து வரும் சூழலில் தற்போது இந்த அரசு மதுபான கடை என்பது தேவையற்ற ஒன்று மதுபான கடையை தமிழக அரசு மீண்டும் மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஐகோர்ட்டில் வழக்கு: இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மே 7 முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. சமூக இடைவெளி இல்லாததால் டெல்லியில் பல இடங்களில் மதுக்கடைகளை மீண்டும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோ போராட்டமோ இல்லாத நிலையில் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கான அரசின் காரணம் ஏற்க கூடியதல்ல. எனவே, ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை: இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாரயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு சார்பில் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு மனுதராரக இணைத்து விசாரக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதே போல் மேலும் இருவர் தரப்பில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யபட்டது. மனுதாரர் வாதம்: டாஸ்மாக் மது பான கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட் மையமாக மாறிவிடும், சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும், உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது, தொடர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும், மருத்துவரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது 17 ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று வாதிடபட்டது . தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்: அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார். அப்போது டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மதுகடைகளை திறப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அரசு பதில் மனுத் தாக்கல்: இதனையடுத்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும். கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது. மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும்” என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கின் தீர்ப்பு: 1. தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை 2. நிபந்தனைகளுடன் மதுபானக்கடைகளை திறக்க ஐகோர்ட் அனுமதி 3. சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம். 4. சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 5. மதுக்கடைகளில் நேரில் சென்று வாங்குபவர்களுக்கு ஒரு நாளில் ஒரு பாட்டிலுக்கு மட்டுமே அனுமதி 6. தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்க ஐகோர்ட் அனுமதி; ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் விற்க வேண்டும். 7. உயர்நீதிமன்ற நிபந்தனைகளை மீறி மது விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்
இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

Leave a Reply