Home > செய்திகள் > பாரம்பர்ய தூதரான தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி

பாரம்பர்ய தூதரான தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி

கொரானா பரவலைத் தடுக்க ஒரு பக்கம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்…

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி பாரம்பரியத்தைக் கொண்டு கொரானாவை முறியடிக்கும் புதிய பிரச்சார உத்தியை கையில் எடுத்துள்ளார்.

முகக்கவசம் அணிவது,சமூக விலகலை கடைபிடிப்பது,அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டு மென தமிழக அரசு அவசர சட்டம் போட்டு வலியுறுத்தி வருகிறது.

அதே நேரத்தில் பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரத்தில் நாள்தோறும் விதவிதமான தகவல்களை பதிவு செய்து வருகிறார்.

பாரம்பரியமே நம் முழுகவசம் என்பதை வலியுறுத்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் காட்டிய வழியில்,உணவே மருந்து என உணர்ந்து நடப்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரம்பரிய மருத்துவமும் மரபுவழி பாதுகாப்பு முறைகளும் புறக்கணிக்கப்படுவதாக ஓர் அச்சம் சூழ்ந்து வரும் நிலையில்… தமிழ்நாடு அரசாங்கத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற நிலையிலிருந்து வேலுமணி செய்துவரும் இந்தப் பிரச்சாரம் அந்த அச்சத்தை முறியடிப்பதாக அமைந்திருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் அன்றாட வாழ்வில், தினந்தோறும் வீட்டிலேயே வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பது நல்ல பலனைத் தரும் என்றும் மஞ்சள் பொடியை வெது வெதுப்பான தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடிப்பது மிகுந்த பலனளிக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமில்லை, மருத்துவ குணமுள்ள பூண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், பனங்கற்கண்டு கலந்து தினமும் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்றும், இதயம் இரும்பாக, உதிரம் வலுவாக, நம் முன்னோர்கள் கண்ட பூண்டின் மகிமையை உணர்ந்து வலிமை பெறுவோம், நோய்த்தொற்று எதிரியை வெல்வோம் என்று தினமும் ஒரு மருத்துவக் குணம் அடங்கிய தகவல்களை மக்களின் நலனுக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டலுக்குள் நம் பாரம்பரியத்தை, பாரம்பரிய மருத்துவ மகத்துவத்தை நவீன ஊடகங்கள் வாயிலாக வேலுமணி விரிவடையச் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல நமது பாரம்பரிய பாதுகாப்பு சக்தியையும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது

You may also like
நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்
மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் – விஜயபாஸ்கர்
பீலா ராஜேஷ் நிர்வாக நடவடிக்கை காரணமாகவே மாற்றம், உள்நோக்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
இவுங்கள பெத்தாங்களா செஞ்சாங்களா?

Leave a Reply