Home > செய்திகள் > 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க டிரம்ப் திட்டம்

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க டிரம்ப் திட்டம்

எதிர்வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கொண்டாட்டங்களை டிரம்ப், தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், ‛இந்த 4 ஆண்டுகள் மிகவும் அற்புதமான காலமாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிய முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்.’ என்றார். இதன்மூலம் 2024ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

You may also like
மேலும் பின்னடைவைச் சந்திக்கும் டிரம்ப்
ஏலியன்கள் அமெரிக்காகவோடு இணைந்து செயல்படுகிறது – இஸ்ரேல் விஞ்ஞானி
ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல- ப.சிதம்பரம் டுவீட்
அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம் டுவீட்
ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி
ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Leave a Reply