Home > செய்திகள் > GoBackStalin டிரன்ட்யை நீக்கிய டிவிட்டர் நடந்தது என்ன ?

GoBackStalin டிரன்ட்யை நீக்கிய டிவிட்டர் நடந்தது என்ன ?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையை விட கோவையில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

சுகாதாரத்துறை அமைச்சரும் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

அதை தொடர்ந்து டிவிட்டரில் Go Back Stalin என்ற டிரண்ட் செய்யபட்டது, இந்த டிரண்ட் அதிமுக, பாஜக ஐடி விங் இணைந்து செயல்பட்டதாக தெரிகிறது. இன்று காலை வரை தேசிய அளவில் முதல் இடத்தில் இருந்த Go Back Stalin ஹேஸ் டேக்கை டிவிட்டர் டிரண்டிங்கில் இருந்து நீக்கியுள்ளது. 

அதற்க்கான காரணம் தங்களின் நோக்கத்திற்காக  தவறான கையாளுகை செய்வது, தொடர்ந்து எந்த கண்டண்டும் இல்லாமல் ஹேஸ் டேக்கை வெறுமனே தொடர்ந்து ஆட்டோ போட் மூலம் போடுவது … 

மேலும் டிரண்ட் செய்ய ஆட்டோ போட் மூலம் போலி அக்கவுண்ட்களை உருவாக்கி டிவிட் போடுவது, குறிபிட்ட ஹெஸ்டெக் மீதாக முறையற்ற போட் டிராபிக் போன்ற டிவிட்டர் பாலிசிக்கு எதிரான நடவடிக்கைகளால் நீக்கபடும். அவ்வகையில் தான் Go Back Stalin டிரண்ட் லிஸ்டில் இருந்து நீக்கியுள்ளது டிவிட்டர் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.  

அதே சமயம்  தமிழக முதல்வர் #MKS  கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்கள் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் அன்பாக கேட்டறிந்தார் என்ற செய்தி வெளியானதும் #WeStandWithStalin ஹேஸ் டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது….

Leave a Reply