Home > அரசியல் > மதுராந்தகம, செய்யூர் தொகுதி தி.மு.க.தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் யார்?

மதுராந்தகம, செய்யூர் தொகுதி தி.மு.க.தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் யார்?

கொரோனா ஊரடங்கு அறிவித்தாலும் அறிவித்தார்கள், திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும் சிக்கல் வந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் என்றும் திமுக இரண்டாக பிரித்துள்ளது. இப்போது புதிதாக அரசு வேறு செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கி இருக்கிறது. காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளராக க.சுந்தர் எம்.எல்.ஏ. பொறுப்பு வகிக்கிறார். ஆனால், அவர் உத்திரமேரூர் தொகுதியில் இருக்கிறார். அது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. அவருடைய பொறுப்புக்கு உட்பட்ட மதுராந்தகம்,செய்யூர் தொகுதிகள் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இதில்தான் திமுக தொண்டர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்ட எல்லைகளை அரசு மூடியுள்ளது. எனவே, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட மதுராந்தகம், செய்யூர் ஆகிய தொகுதிகளுக்கு வரமுடியவில்லை. இந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக தொண்டர்கள் மாவட்டச் செயலாளரை சந்திக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மாவட்டச் செயலாளரின் உதவியோ, வழிகாட்டுதலோ இல்லாமல் நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, திமுக தலைமை இதில் உடனடி கவனம் செலுத்தி, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளரை நியமித்தால் உதவியாக இருக்கும் என்று தொண்டர்கள் கருதுகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டால் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

You may also like
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!

Leave a Reply