Home > செய்திகள் > மன்னிப்பு கோர முடியாது நீதிமன்ற நடவடிக்கை எதிர்கொள்வேன் – பிரசாந்த் பூஷன்

மன்னிப்பு கோர முடியாது நீதிமன்ற நடவடிக்கை எதிர்கொள்வேன் – பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் மன்னிப்பு கோர முடியாது என்றும், எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்க தயார் என்றும் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரையில் நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் கருத்துக்கள் தெரிவித்தார் என்பது புகார்.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வழக்கின் விசாரணை கடந்த 14ம் தேதி நடைபெற்றது.அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்து 20ம் தேதி தண்டனை விவரங்களை வழங்குவதாக தெரிவித்து நீதிபதிகள் வழக்கினை ஒத்திவைத்திருந்தார்கள்.

இன்றய தினம் இந்த வழக்கின் விசாரணை என்பது நடைபெற்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து பிரசாந்த் பூஷண் தரப்பு மூத்த வழக்கறிஞரை பொறுத்தவரையில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். ஏனெனில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு செய்ய பிரசாந்த் பூஷண் இருப்பதாகவும், இதற்கு 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

நீதிபதிகளை பொறுத்தவரையில், இது அவமதிப்பு வழக்கு. குற்றவாளி என்ற தீர்ப்பை மறு ஆய்வு கோரிதான் நீங்கள் மனுத்தாக்கல் செய்திருக்கிறீர்கள். தண்டனை விவரங்களை நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. தண்டனை விவரங்கள் அறிவித்த பிறகு நீங்கள் மறு ஆய்வு செய்ய மனுதாக்கல் செய்யலாமே என்று கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருப்பது நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதேசமயத்தில் தான் தெரிவித்த இந்த கருத்துக்கள் என்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகாது.

எனவே தான் மன்னிப்பு கோர விரும்பவில்லை; எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்க தயார் என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். ஜனநாயக உரிமைகளுக்கு உட்பட்டே நீதிமன்றத்தை விமர்சனம் செய்தேன். மனம்போன போக்கிலோ, யோசனையை இன்றியோ முன்வைக்கவில்லை என பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கினை ஒத்திவைக்க விரும்பவில்லை.

அதில் தாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால் இன்றைய தினம் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like
எட்டு வழி சாலைக்கு தடை தொடரும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்
உச்சநீதிமன்ற
உச்சநீதிமன்றத்திற்கு முதன் முறையாக பொங்கல்விடுமுறை அறிவிப்பு
“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு”

Leave a Reply