Home > செய்திகள் > 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You may also like
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
வானவில் உருவாவது எப்படி?
சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?

Leave a Reply