பெற்றோர் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
ஹெக்டர் கணக்கில் பயிரிட்ட ரெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமாகியிருந்தன. அதை அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டதுடன் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அத்துடன் ஆதி திராவிடர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த 7 மாத காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் விளைவாக அரசு பள்ளி திறக்கும் முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.