Home > செய்திகள் > சுகாதார துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு 2 லட்சம் வழங்குமா?

சுகாதார துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு 2 லட்சம் வழங்குமா?

தமிழகம் கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் போராட்டத்தின் தளபதிகளாக நின்று கொண்டிருப்பவர்கள் சுகாதாரத்துறையினர் தான்.

இந்நிலையில், சுகாதாரத்துறைக்கு உட்பட்ட ஊழியர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அளிப்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் சுகாதாரத்துறையில் பரவி வருகிறது.

இதுபற்றி சுகாதாரத்துறை ஊழியர்கள் தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா தொற்றை எதிர்த்து வேறு யாரையும் விட தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பது சுகாதாரத்துறை ஊழியர்கள் தான்.

சுகாதாரத்துறை என்றால் மருத்துவர்களில் இருந்து, நர்ஸுகள், சோதனை செய்யும் ஊழியர்கள், சாம்பிள் சேகரிப்பவர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை சுகாதாரத் துறைக்கு உட்பட்டவர்கள் தான்.

இவர்களுக்கான முழு பாதுகாப்பு அரசால் தரப்பட்டிருக்கிறதா என்றால் அது பெரிய கேள்விக்குறி தான்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் பற்றாக்குறை இருந்தாலும் இன்று வரை கொரோனா போராட்டத்தில் முன் களப் போராட்ட வீரர்களாக இருந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் தான் அரும்பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்களில் யார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அரசு தரப் போவதாக ஒரு தகவல் எங்கள் துறையில் பரவி வருகிறது.

தேசிய இன்ஷூரன்ஸ் திட்டத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் இருந்து மாதாமாதம் 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

இப்போது அரசே சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் பேசி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு 2 லட்சம் பெற்றுத் தர முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள்.

மாவட்டம் தோறும் சுகாதாரத்துறையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

விரைவில் இந்தப் பணம் வழங்கப்படும் என்று ஊழியர்களுக்குள் நம்பிக்கையான தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் சுமார் 25 ஆயிரம் நர்ஸுகள், 19 ஆயிரம் டாக்டர்கள், 15 ஆயிரம் பிற ஊழியர்கள் என சுமார் 60 ஆயிரம் பணியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இரண்டு லட்சம் ரூபாய் தரப்போகிறது என்ற தகவலை அறிந்தோம்.

அரசின் முயற்சியை வரவேற்கிறோம். ஆனால் அதே நேரத்தில் முதல்வர் கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்தார்.

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் ஊக்கத் தொகையாக வழங்குவோம் என்று அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. காரணம் நிதியில்லை என்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதுதான் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்நிலையில் தொற்றுள்ள அனைவருக்கும் இரண்டு லட்ச ரூபாய் என்பது வரவேற்கத் தகுந்தது தான் என்றாலும்…

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் முதல்வர் அறிவித்த ஊக்கத் தொகையை முதலில் வழங்க வேண்டும் என்கிறது நர்சுகள் சங்க வட்டாரம் அதே நேரம் …

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலில் அறிவித்தார் முதலமைச்சர்.

பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் என மத்திய அரசு அறிவித்ததை மேற்கோள் காட்டி, “மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்” என்று கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று அறிவித்தார்.

தமிழக அரசின் கணக்கின்படி ஒரு டாக்டர், இரு நர்ஸுகள் கொரோனா தொற்றால் இறந்ததாக சொல்லி தலா 25 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்கள்.

ஆனால், சுகாதாரத்துறை உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக தொழிற்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply