Home > செய்திகள் > கியாஸ்’ சிலிண்டர் வாங்க “ஓடிபி” எண் தேவை

கியாஸ்’ சிலிண்டர் வாங்க “ஓடிபி” எண் தேவை

வீட்டு சமையலுக்கு பயன்படும் கியாஸ் சிலிண்டர்

வீட்டு சமையலுக்கு பயன்படும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான விதிகள் வரும் நவம்பர் மாதம் முதல் மாறப் போவதாத் தெரிகிறது.

அரசு எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. வழக்கமாக கைபேசியில் தகவல் சொன்னால் ஊழியர் வீட்டிற்கு கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்து தந்து விடுவார். இனிமேல் அப்படியில்லை.

சிலிண்டர் திருட்டுக்களை தடுக்கவும், சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் புதிய நடைமுறைகள் கொன்டுவரப்பட இருக்கின்றன.

இதன் படி சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர் உங்கள் கை பேசி எண்ணுக்கு ஒரு “ஓ.டி.பி.” எண் வரும். அந்த எண்ணை சிலிண்டர் வாங்கும் சமயத்தில் டெலிவரி செய்பவரிடம் சொல்ல வேண்டும்.

அவர் அதனை தன்னுடைய ரசீதில் இருக்கும் எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு காகிதத்தில் எழுதி உங்களிடம் கையெழுத்து பெறுவார்.

நீங்கள் ஓடிபி எண்ணைச் சொல்லாவிட்டாலோ, அல்லது மாற்றி சொன்னாலோ அவர் உங்களுக்குறிய கியாஸ் சிலிண்டரை தரமாட்டார். அது நிலுவையில் இருக்கும்.

அடுத்தகட்டமாக எரிவாயு விற்பனை நிறுவனத்தில் உங்கள் கைபேசி எண் சரியாக கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். அப்படி என்றால் தான் உங்கள் கைபேசிக்கு ஓடிபி எண் வந்து சேரும்.

உங்கள் கைபேசி எண் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ மாறிவிட்டாலோ உங்கள் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வருபவரிடம் சொல்லி மாற்றிக் கொள்ளலாம். அவரிடம் ஒரு கைபேசி ‘செயலி’ அந்த உதவியுடன் உங்கள் கைபேசி எண்ணைப் புதுப்பிக்கலாம்.

இந்த புதிய விநியோக முறையை முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்த இருக்கிறார்கள்.. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply