நூறுநாள் வேலைத் திட்டத்தை மூடுகிறதா மோடி அரசு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய திட்டமாக கருதப்பட்டது கிராமப்புற ஏழைகளுக்கு நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பொருளாதார நிலை வேகமாக உயர்ந்தது. மக்களின் வாங்கும் தன்மை அதிகரித்தது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது. பொருதார நிபுணர்கள் இந்தத் திட்டத்தை மிகவும் பாராட்டினார்கள். ஆனால், காங்கிரஸின் இந்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் பாஜக அரசு பல்வேறு திருகுதாள வேலைகளை செய்கிறது. குறிப்பாக இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை...
Read More

மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய குடியரசுதின பரிசு!

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடும் போது, காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டிருப்பதையும், குடியரசு அந்தஸ்த்தையே பறிக்கும் பாஜகவின் குடியுரிமைச் சட்டத்தையும் பல்வேறு அறிஞர்களும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் சட்டத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒரு ட்வீட்டையும் காங்கிரஸ் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரோஹன் குப்தா பதிவிட்டிருந்தார். “நாட்டை பிரிக்கும் வேலைக்கு இடையே நேரம் இருந்தால் அரசியல் சட்டத்தை...
Read More

காண்டம்களை கண்டுபிடித்தவர்கள், காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்காதது ஏன்?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை பாஜக தலைவர்கள் பலவிதத்திலும் மோசமாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு 2 ஆயிரம் மதுப்பாட்டில்களும், 3 ஆயிரம் காண்டம்களும் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். எப்படித்தான் கேலி பேசினாலும், கேவலப்படுத்தினாலும், இந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சேர்வதற்குரிய திறமை அவர்களுக்கு கிடையாது. இங்கு அனுமதி கிடைப்பது எளிதல்ல. பல்கலைக் கழகத்தை கேலி பேசுவதாலோ, அங்கு படிப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதாலோ, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்துவிடாது. உங்களுக்கு பாதுகாப்புக் கிடைத்துவிடாது. உங்களுடைய...
Read More

இந்திய பாஸ்போர்ட் மதிப்பும் வீழ்ச்சி 82 ஆவது இடத்திலிருந்து 84க்கு சென்றது!

2020 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 பாஸ்போர்ட்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 84 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடம் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு கிடைத்திருக்கிறது. அந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால், 191 நாடுகளுக்கும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால் 190, ஜெர்மனி, தென்கொரியா பாஸ்போர்ட் இருந்தால் தலா 189 நாடுகளுக்கும் செல்ல முடியும். இந்திய பாஸ்போர்ட் இருந்தால் பூடான், கம்போடியா, இந்தோனேஷியா, மகாவோ, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கென்யா, மொரிஷியஸ், சிசெல்ஸ், ஜிம்பாப்வே, உகாண்டா, ஈரான், கத்தார் உள்ளிட்ட...
Read More

மோடியின் டிஜிடல் இந்தியா தோலுரித்து கிண்டல் செய்யும் கொரியா டைம்ஸ் கார்ட்டூன்!

மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்துவிட்டு, கடந்த ஐந்து மாதங்களாக அங்கு மக்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. வெளியுலகத் தொடர்புகளை துண்டித்து, காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தடுத்திருக்கிறது. அதைப்பற்றி உலகம் கவனத்தில் கொள்ளும் சமயத்தில், திடீரென்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி, இஸ்லாமியர்களை குறிவைத்து நாடற்றவர்களாக மாற்றும் முயற்சியை மோடி அரசு தொடங்கியது. நாடு முழுவதும் கோடிக்கானோர் வேலைகளை பறிகொடுத்து, தொழில்களை மூடி, பொருளாதாரம் கடும்...
Read More

உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டது ஈரான்தான்! உலக நாடுகள் அதிர்ச்சி!

கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியானார்கள். இராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 80 பேர் பலியான சில மணி நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இது விபத்து என்று ஈரான் சொல்லிவந்த நிலையில், அமெரிக்காவும் உக்ரைனும் ஈரான்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டின. ஈரான் தெரியாமல்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்றுதான் அவை கூறின....
Read More

அமிர்கான் மகளின் அசத்தல் படங்கள்!

ஒரு மாதம்கூட ஆகவில்லை. கடந்த நவம்பரில் அமிர்கான் மகள் அய்ரா டைரக்ட் செய்த நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் நடித்திருந்தார். பிரபல நடிகை ஹாஸெல் கீச் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த நாடகம் மீடியாக்களில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால், அந்த புகழ் வெளிச்சம் மங்குவதற்குள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார் அய்ரா. அவர் தனியே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அவருடைய அழகை...
Read More

நான் ஒரு மொரட்டு சிங்கிள்! அடா ஷர்மா பளிச்

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் கம்மாண்டோ-3 படத்தின் நாயகியாக இப்போது நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கலக்கி இருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதை ட்ரெய்லரிலேயே பார்க்க முடிந்தது. கமாண்டோ-3...
Read More

குடியுரிமைச் சட்ட நகலுக்கு பாகிஸ்தான் இந்துக்களும் எதிர்ப்பு!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், ஜெயின்கள் ஆகிய மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவும், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளை...
Read More

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக அமித் ஷா பொய் சொல்கிறார் – புள்ளிவிவரங்களுடன் பதில்!

பாகிஸ்தான் உருவானபோது 1947ல் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாகவும், இப்போது 3.7 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் குடியுரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் பேசியதை பாகிஸ்தான் அரசு புள்ளிவிவரங்களுடன் மறுத்துள்ளது. 1947ல் அப்போதைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த தற்போதைய பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாக அமித் ஷா கூறுவது அப்பட்டமான பொய். 1961ல் எடுக்கப்பட்ட...
Read More

துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி

சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில்,  சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார்.  ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.