Home > கவிதை > மழைத்துளிகளின் கீர்த்தனைகளில்!!

மழைத்துளிகளின் கீர்த்தனைகளில்!!

நீ
நனைந்து
பிடித்த குடைக்குள்
நனைகிறது
அன்பெனும்
மழை

தூறல் எனும் சாரல்
என்னை ஆட்கொள்ளும் போது
நாணம் என்னும் வெட்கம்
என்னுள் இருந்து விலகி
எங்கேயோ சென்று விடுகிறது.
பிறகு என்ன?
மழைத்துளிகளின்
கீர்த்தனைகளில்
நேற்று பிறந்த
குழந்தை போலவே
மாறிவிடுகிறேன்
நான்

Leave a Reply