Home > கவிதை > செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

cell phone

நொடிக்கொருமுறை என்னை முறைக்கின்றான்
நீயனுப்பும் குறுஞ்செய்திகளை
நான் விழுங்குவதாய் நினைத்து!

இரவெல்லாம் காதல்மொழி நீங்கள் பேச
சூடாவது என்னவோ நான்தான்
நாள் முழுவதும் சார்ஜரில்!

இடைவேளை கொஞ்சம் தாருங்கள்
முத்த மழையில் குளித்தநான்
கொஞ்சம் துவட்டிக்கொள்கிறேன்!

You may also like
எத்தனை முறை சொல்லுவது
துயில் கொள்ள
தாலாட்டு
பேனா

Leave a Reply