Home > கவிதை > உலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்!

உலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற, உலகத் தமிழ்ப் பாடலாசிரியர்
பயிலரங்கம் 2 -ன் மூன்றாம் நிலை வெற்றியாளராக கொரியாவில் பணிபுரியும் சகாய டர்சியூஸ் பீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது,

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற, உலகத் தமிழ்ப் பாடலாசிரியர்
பயிலரங்கம் 2 -ன் மூன்றாம் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த அருமையான பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பளித்த தோழமை பொன் கோகிலம் அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாடல் எழுதும் நுணுக்கங்களை மிகவும் எளிமையாகவும் ஆழமான கருத்துக்களாலும் கற்றுக் கொடுத்து என்னுள் பாடல் எழுதும் ஆர்வத்தினை தூண்டிய பயிலரங்கத்தின் பயிற்சியாளர் கவிஞர் சினேகன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தத்தகாரத்தில் எனக்குத் கொஞ்சம் தெளிவு பிறக்கும் வண்ணம் மிகச்சிறப்பாக வழிகாட்டிய மலேசிய பாடலாசிரியர் யுவாஜி அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்ல பாடலாசிரியர்களை வார்த்தெடுக்கும் வண்ணம் இந்த அருமையானப் பட்டறையை ஏற்படுத்தி அதை மிக அழகாக திட்டமிட்டு மிகவும் நேர்த்தியாகச் செயற்படுத்தி வரும் ஏற்பாட்டுக் குழுவினர் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் அகிலம் நீ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

You may also like
கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!
கொரோனாவை கட்டுப்படுத்திய கபசுரக்குடிநீர் – ஆராய்ச்சி முடிவு!
பெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020
கொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!

Leave a Reply