Home > அரசியல் > அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை -அமைச்சர் அன்பழகன்

அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை -அமைச்சர் அன்பழகன்

இன்ஜினீயரிங் உள்பட கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தியிருந்தால் அவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மறுபக்கம், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று AICDE மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இதனால் அரியர் வைத்திருந்த மாணவர்கள் கலக்கமடைந்தனர். எனினும், AICDEஎந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 16) இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், “அரியர் தேர்வில் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு தொடர்பாக மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதல்படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “அரியர் ஆல்-பாஸ் விவகாரத்துக்கு எதிராக ஏஐசிடிஇ சேர்மன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவில்லை. இதுதொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வமான தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

You may also like
ஆல்பாஸ் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை: யூஜிசி
ஆல்பாஸ் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை: யூஜிசி
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது.
முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.
தமிழ்நாடு அரசின்அரியர் தேர்வு ரத்து ஆணை தவறானது – ஏஐசிடி தலைவர்

Leave a Reply