Home > அரசியல் > உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா

உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply