Home > அரசியல் > ஐயப்பனை வைத்து கோடி கோடியாய் பிச்சையெடுக்கும் பந்தள மகாராஜா ஃபேமிலி!

ஐயப்பனை வைத்து கோடி கோடியாய் பிச்சையெடுக்கும் பந்தள மகாராஜா ஃபேமிலி!

ஐயப்பனை காணச் செல்லும் முன் சபரிமலையின் அடிவாரத்தில் பந்தள மகாராஜா என்று ஒரு ஃபேமிலி கீழே ஒரு தட்டை வச்சி பணம் போடுன்னு கால் மேல கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கும்.

நாம பணம் போட்டா அங்க உக்காந்திருக்கவனுக முகத்துல ஒரு எக்ஸ்பிரஸனும் இருக்காது. என்னமோ நம்ம பட்டகடனை கட்டிட்டு போற மாதிரி சிரிக்க கூட மாட்டானுக ஆணவமா இருக்கும்.

அவனுக பார்வை. மலையேற கப்பம் கட்டிட்டு போறது நம்ம கடமைன்னு அவனுக நினைப்பு. பத்து ரூவா போடுறவனுக்குத்தான் இப்படி ஒரு மரியாதை போலன்னு நினச்சா 100 ரூவா போட்ட மச்சானுக்கும் அதே மரியாதைதான் கிடைத்தது. எந்திரிச்சி விபூதி கூட தரல.

அந்தத் தட்டுல 100 ரூவா 200 ரூவா தாளு தான் கெடக்கும். அது ஒரு சைக்காலஜி ஓ…. இந்தத் தட்டுல 100 200 ரூவா தான் போடணும் போலன்னு போட்டு ஏமாற்றவங்க ஏராளம். 10 ரூவா போட்டா ஒடனே எடுத்துருவாய்ங்க.

அரசியல் கட்சிகள், கோவில் டொனேசனுக்கு வாரவிங்க நம்ம கையில திணிக்கிற கட்டுல திருப்பிப் பார்த்தா எல்லாம் 1000, 2000, 5000 ம்னு எழுதியிருக்கும்.

நமக்கே 101 எழுத கூச்சமா இருக்கும். போன தடவை 1000 ரூவா குடுத்தீங்க அண்ணாச்சி இந்த தடவ 5000 ரூவா எழுதுங்க கூசாம நம்ம கிட்டயே பொய் சொல்லுவானுக.

கையில காசு இல்லன்னா ஜீ பே நம்பர் தாறோம் அண்ணாச்சி அனுப்புங்கன்னு சொல்லுவாய்ங்க.

இல்லன்னா கோபுரம் பெயிண்ட் அடிக்க 15000 ஆவும் அந்த செலவ ஸ்பான்சர் பண்ணுறீங்களான்னு கேப்பானுவ.

அதுக்கு 101 பரவாயில்லன்னு 101 தான் எழுதுவேன்னு அடம் பிடிச்சா இருங்க இருங்க எழுதாதீங்க வேற புக்கு தாறோம்பாய்ங்க. அதுல எல்லாரும் 50 ரூவா 20 ரூவா கூட டொனேசன் எழுதி இருப்பாய்ங்க.

அத பாத்தா அட பாவத்த நாம தான் அவசரப்பட்டு 101 ன்னு வாயக் கொடுத்து தொலச்சிட்டோமோன்னு வயித்தெரிச்சலா இருக்கும். அதே டெக்னிக்தான் பந்தள மகாராஜாவும் கடை பிடிப்பது.

ஆளாளுக்கு குறைந்தது 10 ரூபாயாவது போட்டு விட்டு மலையேறுவார்கள். ஒவ்வொரு சீசனும் பல கோடிகள் வருமானம் கிடைக்கும் பாவம் ஏழை ராஜாக்கள்.

பத்துப்பத்து ரூவாயா பத்து கோடி பேருகிட்ட வாங்கி ஏமாந்தவங்க கிட்ட நூறு இரநூறுன்னு வாங்கி அதை தேவசம் போர்டு கணக்குல செலுத்தியிருந்தால் பரவாயில்லை.

மாறாக அந்த பணம் ஏழை பந்தள ராஜா பெர்சனல் அக்கவுண்டுக்கு போச்சின்னா ரொம்ப தப்பா தெரியுதுல்ல.

கேட்டால் இந்துக்களுக்கு எதிரா பேசும் நீ ஒரு கம்யூனிஸ்டு, பாவடை சங்கின்னு நாலு சங்கிகள் சண்டைக்கு வருவாய்ங்க.

சாமியே……ய் சரணம் ஐயப்பா

SERGIO MARQUINA

Leave a Reply