Home > அரசியல் > கனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா? #kanimozhi_karunanidhi #udhyanidhi_stalin

கனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா? #kanimozhi_karunanidhi #udhyanidhi_stalin

உதயநிதி பிரச்சாரப் பயணத்தை தொடங்கியபோது தடை, கைது என்று ஆர்ப்பாட்டம் செய்தது எடப்பாடி அரசு. ஆனால், கனிமொழி எம்.பி. சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரிலிருந்தே பிரச்சாரப் பயணத்தை கெத்தாக தொடங்கியிருக்கிறார். அதற்கு எந்த இடையூறும் செய்யாமல் அனுமதித்திருக்கிறதே ஏன் என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது.

உதயநிதியை செல்வாக்கு மிக்கவராக காட்டி, அவருடைய இமேஜை கட்சிக்காரர்கள் மத்தியில் உயர்த்திக்காட்ட மாநில அரசாங்கமே உதவி செய்திருக்கிறதா? அல்லது போலீஸ் உயர் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள்.

அப்படி இருக்காது என்றும், கனிமொழி ஒரு பெண் என்றும், கலைஞரைப் போல எதையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் துணிச்சல் பெற்றவர் என்றும், அவர் மீது கைவைத்து பெண்கள் மத்தியில் கெட்டபெயர் எடுக்க வேண்டாம் என்றும் மாநில அரசு கைது நடவடிக்கையை தவிர்த்தது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கனிமொழியை கைது செய்தால் அது அரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதால்தான், உதயநிதியையும் பிரச்சாரத்துக்கு அனுமதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது, கனிமொழியைக் கைது செய்யப் பயந்த மாநில அரசு, உதயநிதியின் பிரச்சாரத்தையும் தடுக்காமல் விட்டது என்கிறார்கள்.

Leave a Reply