Home > அரசியல் > கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள், அங்க பிற சாதி ஆட்களால் பயன்படுத்தபட்டு வந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க.

போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள்.

ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க. இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க.

துப்பாக்கிச் சூட்டுல பலியான ஏழுமலைக்கு வெறும் 21 வயதுதான். திருமணம் ஆகலை. பலியான இன்னொருத்தர், 25 வயதான ஜான் தாமஸ். இவருக்கு திருமணமாகி ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது.
சரி. இந்தப் படுகொலைகள் எந்த ஆட்சியில நடந்துசுன்னு தெளிவா தெரியனுமா? 1994-வருடம். ஜெயா ஆட்சியில. அதிமுக ஆட்சியில. இறந்தது பறையர்கள்.

இதப்பத்தி இங்க உள்ளவனுங்க என்னைக்காச்சும் பேசிப் பாத்திருக்கீங்களா? பாத்துருக்க மாட்டீங்க?
ஆனா, பஞ்சமி நிலம் பத்தி அதிகமா பேசி கேட்ட மாதிரி உணர்விருக்கும் உங்களுக்கு. ஆமா… முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்துல இருக்குதுன்னு சங்கிகள் அடிச்சு விட்ட பொய்யைத் தூக்கிட்டு வந்து பேசிட்டு இருப்பானுங்க.

ஆனா, தலித்துகளை குந்தாங்கொலையா கொன்னுபோட்ட அதிமுக பத்தி பேச மாட்டானுங்க.
சரி, இந்த் ரஞ்சிதாவது இத வச்சு படம் எடுப்பானா? மாட்டான். ஆனா மும்பைல போயி அங்க இடம் கேட்டு போராடுற மாதிரி படம் எடுப்பானுங்க. இதுதான், இவனுங்களோட தைரியம். அம்மான்னா, ஒடுங்கி உக்காந்து சரணம் போட்டுருவானுங்க.

ஆனா எல்லாக் கலவரத்தையும் திமுக தலைல சுமத்தி, அதிமுகவுக்கு புனிதர் பட்டம் வழங்கி, குளிர் காய சொல்லிக் கொடுக்கிறது நாக்பூர் சங்கிகள். அதுக்கு விலை போறது பூராம் ரஞ்சித் சங்கிகள் 😋 நாய் டம்பளர்கள் 😋 அதிமுக அடிமைகள்.

கவிதா சொர்ணவல்லி

You may also like
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

Leave a Reply