Home > அரசியல் > கலைஞர் தீட்டிய இரண்டு கூராயுதங்கள் – M.K.STALIN – KANIMOZHI KARUNANITHI

கலைஞர் தீட்டிய இரண்டு கூராயுதங்கள் – M.K.STALIN – KANIMOZHI KARUNANITHI

யாரையும் யாரும் உருவாக்கிவிட முடியாது. ஒருவரின் விருப்பத்துக்கு ஏற்றபடி அவர்களை வழிநடத்தலாம். அல்லது வழியைக் காட்டலாம். அதற்கு சம்பத்தப்பட்டவரின் அடிப்படைத் தேவை என்னவென்றால் தனது விருப்பத்தை வெளிப்படுத்த தெரியவேண்டும்.

நான் எனது தந்தையைப் போல, அல்லது யாரோ ஒருவரைப்போல ஏதோ ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவருடைய வளர்ச்சிக்கான பின்னணி எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர் பட்ட கஷ்டங்களும், அவருடைய குடும்பப் பின்னணியும் அறிந்திருக்க வேண்டும்.

கலைஞரின் மூத்த மகன் பாட்டு கற்றிருந்தார். சினிமாவில் நடிக்க விரும்பினார். அதற்கு கலைஞர் ஏற்பாடு செய்தார். இதை அன்றைக்கு எம்ஜியாரே ஆதரித்தார். அவர்தான் மு.க.முத்துவின் படத்துக்கு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

சினிமாவில் இருந்து ஒதுங்கி, அவர் திமுக அரசாங்கத்தில் பொறுப்பேற்க தேவையான தொடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நேரம் அது.

ஆனால், நிலைமை திசைமாறி, எம்ஜியார் மிரட்டப்பட்டு, திமுகவை உடைக்க துணைபோகும் அவலம் நேர்ந்தது. மு.க.முத்துவின் சினிமா வாழ்க்கையே அன்றைக்கு திமுக எதிர்ப்பு பிரச்சாரமாக மாறியது. மு.க.முத்துவின் சினிமா வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.

ஆனால், அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் கட்சியின் அடிமட்டத்திலிருந்து தனது தந்தையைப் போலவே கொஞ்சம்கொஞ்சமாக அரசியலில் முன்னேறத் தொடங்கினார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் அவரைக் கைதுசெய்ய அஞ்சிய இந்திரா அரசு, அவருடைய மகன்களில் மு.க.ஸ்டாலினை கைது செய்து சித்திரவதை செய்து அதன்மூலம் கலைஞரின் அரசியல் வாரிசாக மாற்றிக்கொடுத்தது.

ஆனால், அவருடன் சிறையில் இருந்த கட்சிக்காரர்களின் பிள்ளைகளுக்கு கிடைத்த வாய்ப்புகள்கூட ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை. கலைஞர் அவரை பொதுவாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அனுபவங்களையும் பெறும்படி தமிழகம் முழுவதும் பயணிக்கச் செய்தார்.

ஸ்டாலினின் வளர்ச்சி மிக மெதுவானதாகவும், ஆனால், உறுதிமிக்கதாகவும் இருந்தது. வேறு கட்சிகளில் மிக எளிதாக கிடைக்கும் பொறுப்புகள்கூட ஸ்டாலினுக்கு அரிதாகவே கிடைத்தது.

தந்தையின் சோதனைகளில் பாடம் கற்ற ஸ்டாலின் இன்றைக்கு திராவிட இயக்கத்தின் எதிரிகளை களத்தில் மிக எளிதாக சமாளிக்கும் அளவுக்கு பலம்பொருந்திய தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

ஸ்டாலின் அடுத்தக்கட்ட தலைவராக உருவெடுக்கும் நிலையிலேயே அவருக்கு நம்பகமான உதவியாளராக தனது மகள் கனிமொழியை கூர்தீட்டத்தொடங்கினார். கனிமொழிக்கும் மிக எளிதில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை.

தனது எழுத்துலக பத்திரிகையுலக வாரிசாகவே கனிமொழியை வளர்க்க திட்டமிட்டார் கலைஞர். கனிமொழியும் அதில்தான் விருப்பம் கொண்டிருந்தார். தந்தையைப்போல புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வமாய் இருந்தார். பத்திரிகைத்துறையிலும் ஆங்கில மொழியிலும் பயிற்சி பெற கனிமொழியை இந்து ஆங்கில நாளிதழில் பணிக்கு அனுப்பினார்.

சாமானிய பெண்ணாக சாமானியர்களுடன் பழகும் பெண்ணாக வளர்ந்த கனிமொழி, திராவிடப் பட்டறையில் தந்தை பெரியாரின் கூராயுதமாக பட்டை தீட்டப்பட்டார். தனக்கு மனச்சாட்சியாக இருந்த தனது மருமகன் முரசொலி மாறனைப் போல தனது மகன் ஸ்டாலினுக்கு ஒரு மனச்சாட்சியாக கனிமொழியை உருவாக்கும் காலம் வந்தது.

எல்லாத் தலைவர்களுமே மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொள்ள நம்பிக்கையான ஒருவரை உருவாக்குவது வழக்கம்தான். அந்த வகையில் கனிமொழியை உருவாக்கும் கலைஞரின் நோக்கத்தை சிதைக்கவே, 2ஜி என்ற மாயவலையை மத்திய பாப்பனக்கூட்டம் பின்னியது. அந்த வலையில் சிக்கவைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் கனிமொழி.

கலைஞரின் மகன் என்பதற்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தார் ஸ்டாலின். கலைஞரின் மகள் என்பதற்காக சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் கனிமொழி. இருவருடைய கைது நடவடிக்கையிலும் அரசியலே மையமாக கொண்டிருந்தது.

கலைஞரின் அரசியலுக்கும் அண்ணாவுடன் நெருக்கம் அதிகமாவதற்கும் காரணமாக அமைந்தது பாளையங்கோட்டை சிறைவாசம்.

அதுபோலத்தான் ஸ்டாலினும், கனிமொழியும் சிறைச்சித்திரவதைகளை அனுபவித்து திமுகவினரின் நன்மதிப்பை பெற்று வலம் வருகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் எதிரிகளை பந்தாடும் இருபெரும் கூராயுதங்களாக இருவரும் இந்த இயக்கத்தை கட்டிக் காப்பார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.

You may also like
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
திமுக எதிர்ப்பால் குப்பை கொட்டும் வரியை வாபஸ் பெற்றது மாநகராட்சி
திமுகவில் பெண்களுக்கு 75 இடங்கள் ஒதுக்கீடு? #one third reservation
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

Leave a Reply