Home > அரசியல் > கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!

கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டம் பிரமிப்பூட்டுகிறது. கொட்டும் மழை, வாட்டும் குளிர், அரச பயங்கரவாதம் என அத்தனை இடையூறுகளையும் தாண்டி, 40க்கும் மேற்பட்டோர் மடிந்த நிலையிலும், 45 நாட்களாக கொஞ்சமும் உறுதிகுலையாமல் களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன்.

‘போராடி போராடி சோர்வடையும் நேரத்தில் அதனை கைவிடுவார்கள்’ என்கிற மோடி அரசின் வழக்கமான குரூர யுக்தி விவசாயிகளிடம் பலிக்கவில்லை. அதுபோலவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவு, காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைகோர்ப்பு என்கிற ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பீலாக்களும் எடுபடவில்லை.சுதந்திர இந்தியா சந்தித்திராத இந்த வரலாறு காணாத போராட்டத்தை மீடியாக்கள் கையாளும் விதம், ஒரு ஊடகவியலாளனாக வெட்கப்பட வைக்கிறது.

ஒன்றுக்கும் உதவாத அதிமுக பொதுக்குழுவிற்கும், சின்னத்திரை நடிகையின் தற்கொலைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட இந்த போராட்டத்திற்கு ஊடகங்கள் தராதது, கொதிப்பை ஏற்படுத்துகிறது.இவ்வளவு நாட்கள் இத்தனை லட்சம் மக்கள் போராடுகிறார்களே என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் மோடியிடம் கொஞ்சம் கூட இரக்க சிந்தனையே இல்லையா?

3 ஆயிரம் கோடி செலவில் மோடி சிலை வைத்த வல்லபாய் பட்டேல் இந்தியாவின் ’இரும்பு மனிதர்’ என்றால் மோடியை கற்கால ’கல் மனிதர்’ என சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

MANI MARAN

You may also like
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)
விவசாயத்தை (யும்) கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் மோடி அரசு

Leave a Reply