Home > அரசியல் > சசிகலாவைவரவேற்க தயாராகும் அமமுகழகம்

சசிகலாவைவரவேற்க தயாராகும் அமமுகழகம்

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை எப்போது என்ற கேள்வி ஒருபக்கம் எழுப்பப்படும் நிலையில், சசிகலாவை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அதற்கான திட்டங்களையும் தீட்டித் தயாராக இருக்கிறார்கள் அமமுகவினர்.
2017 பிப்ரவரி 15 முதல் 2020 செப்டம்பர் 14ஆம் தேதி வரையில் சரியாக 174 வாரங்கள் சிறை வாழ்க்கையைக் கழித்துள்ள சசிகலாவை, சட்ட ரீதியாக வெளியில் கொண்டுவருவதற்கு, பேசவேண்டியவர்களிடம் பேசியும், சந்திக்கவேண்டியவர்களைச் சந்தித்தும் பல போராட்டங்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகண்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வெளியில் உள்ள தினகரனும், சிறையில் உள்ள சசிகலாவும். அக்டோபர் முதல் வாரத்தில் அபராதத் தொகையை செலுத்திவிட்டால் விடுதலை தேதி மிகச் சரியாக தெரிந்துவிடும் என்பதால் வரவேற்பு மூடுக்கு வந்திருக்கிறது அமமுக.
வெளியில் வரப்போகும் சசிகலாவுக்கு எப்படியெல்லாம் வரவேற்புகள் கொடுப்பது, வழியில் இளப்பாற எங்கே நிறுத்துவது என அமமுக பொதுச்செயலாளர் தினகரனும், துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து பெங்களூரு சிறைக்குச் சென்றபோது வாணியம்பாடியில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டார் சசிகலா. அதேபோல பெங்களூருவிலிருந்து வெளியில் வரபோகும் சசிகலா இடையில் இளைப்பாற, அரூர் சேலம் வழியில் மஞ்சவாடி பகுதியில் மேற்கு மலைத் தொடர்ச்சி அருகில், சுமார் பத்தாயிரம் சதுர அடியில் சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸை புதுப்பித்து வருகிறார்கள்.
பெங்களூரு சிறை வாசல் முதல் சென்னை வரையில் அசத்தலான வரவேற்புகள் கொடுப்பதற்கு பழனியப்பனுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அன்றாடம் தொடர்புகொண்டு ஆலோசித்து வருகிறார்கள்,
தமிழகம் முழுவதும் ஒன்றியம், நகரம், வார்டு, கிளை எனப் பொறுப்பாளர்கள் நியமித்துவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பூத்களிலும், பூத் பொறுப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் என நியமித்து, அவர்கள் பெயர், பூத் எண், வாக்காளர் எண், பூத் கமிட்டியில் உள்ள பத்து பேரின் வாக்காளர் எண், பெயர், ஆதார் எண், கிளை உறுப்பினர்களின் 24 நபர்களின் பெயர், ஆதார் எண், வாக்காளர் எண், கைப்பேசி எண், பூத் எண் என விவரங்களை நோட் போட்டு கேட்டுள்ளார் பொதுச் செயலாளர் தினகரன்.
பெங்களூர் டு சென்னை வழியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அவரவர் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்துவந்து அவர்களது மாவட்ட எல்லையில் வரவேற்புகள் கொடுக்க வேண்டும், சுங்க சாவடிகளில் பெரும் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், முக்கியமான பாயின்ட்களைப் பிறகு குறிப்பிடுகிறோம் என்று கிருஷ்ணகிரி முதல் சென்னை வரையிலான மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அமமுக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக வரவேற்க வரும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அனைவர் முகத்திலும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான வேலைகளிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டுவருகிறார்கள்.
வரவேற்பு ஏற்பாடுகள் பற்றி விளக்குவதற்காக விரைவில் டிடிவி தினகரன், பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்து சில ஆலோசனைகள் கேட்க இருப்பதாகவும் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆக, சசிகலாவை வரவேற்பது என்பது வெறும் வரவேற்பாக இருக்காது, இத்தனை நாள் அமைதியாக இருந்த தினகரனின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கமாகவும் இருக்கும் என்கிறார்கள் அமமுகவினர்

You may also like
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2

Leave a Reply