Home > அரசியல் > மதுரையில் டாக்டர் சரவணன் இம்சை தாங்க முடியலையாம்!

மதுரையில் டாக்டர் சரவணன் இம்சை தாங்க முடியலையாம்!

தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் நேரத்திலெல்லாம் உள்கட்சி குழப்பங்கள்தான் தலைதூக்கும். அதனாலேயே பல இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்க நேரும். ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டு கட்சியை தோற்கடிப்பார்கள். இப்போதும் எதிர்வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சீட்டுக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பதோ 234 தொகுதிகள் மட்டும்தான். தொகுதிக்கு குறைந்தது மூன்றுபேர் அடித்துக்கொள்ளும் அளவுக்கு மோதல் பலமாக இருக்கிறது என்கிறார்கள். அதிலும் டாக்டர் சரவணன் மதுரை முழுவதையும் தனக்கு ஒதுக்கும்படி கேட்கிறார் என்கிறார்கள்.

இருக்கிற கட்சியில் இருந்துகொண்டே அடுத்த கட்சிக்கு மாறும் ஆற்றல்பெற்றவர் என்று பேர்பெற்ற சரவணன், திமுகவில் உள்ள சீனியர்களையெல்லாம் துச்சமாக மதிக்கிறார் என்கிறார்கள். மதிமுகவுக்கு போனார். பாஜகவுக்கு போனார். திமுகவுக்கு வந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியை கொடுத்தார்கள். கட்சிக்காரர்களின் கடுமையான உழைப்பில் வெற்றிபெற்றார். பணம் செலவழித்திருக்கலாம். மற்றபடி அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் அங்கு இல்லை.

ஆனால், ஜெயலலிதா வழக்கில் அவருக்கு கிடைத்த பெயரைக் கொண்டு தன்னை மிகப்பெரிய திறமைக்காரர் என்று தானே நினைத்துக்கொண்டிருப்பதாக கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். 2021 தேர்தலில் அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியை கட்சி கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது மணிமாறன் அங்கு போட்டியிடப் போவதாக கூறுகிறார்கள்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, ஆர்.பி.உதயகுமாரை தோற்கடிக்கப்போவதாக சவால் விட்ட மணிமாறன் இப்போது திருப்பரங்குன்றத்துக்கு மாறப்போவதாக கூறுவது கட்சிக்காரர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதேசமயம் தான் போட்டியிட்டு வென்ற திருப்பரங்குன்றம் தொகுதியுடன் மதுரை வடக்குத் தொகுதியையும் சரவணன் குறிவைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். வெறும் பணம் மட்டும் இருந்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று சரவணன் நினைத்தால் அது நிறைவேறாது. மக்கள் செல்வாக்கு வேண்டும். அத்துடன் மருத்துவத் துறையில் அவர்மீது ஏராளமான புகார்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதெல்லாம் கட்சித்தலைமைக்கு சென்றிருப்பதாக கூறும் கட்சிக்காரர்கள், தலைமை உரிய நடவடிக்கை எடுத்து மதுரையில் அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

You may also like
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
ஒன்றிய மாவட்டப் பொறுப்புகளுக்கு சாதிகளுக்கு உரிய பிரிதிநிதித்துவம் – திமுகவில் கோரிக்கை
திமுக நிர்வாக வசதிக்காக புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
மகளிர் வாக்குகளை பெற திமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது?

Leave a Reply