Home > அரசியல் > ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும். ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

You may also like
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
எட்டு நிமிடம் கூட தாக்குப் பிடிக்காத சங்கிகளின் பொய்கள்
பாஜக மந்தையின் மேய்ச்சல் நிலமாக தமிழகம் மாற ரஜினி பயன்படுவாரா?

Leave a Reply