Home > அரசியல் > விநாயகர் சதுர்த்தி கொண்டாடினாரா உதயநிதி

விநாயகர் சதுர்த்தி கொண்டாடினாரா உதயநிதி

திமுக என்றாலே மத எதிர்ப்பு என்று தமிழக மக்களிடையே எண்ணம் பரவியுள்ளது. இந்நிலையில் திமுகவினரின் சமீப கால செயல்பாடுகள் அதற்கு நேர்மாறானதாக உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் மண் விநாயகர் சிலை ஒன்றில் எருக்கம்பூ மாலை அணிவித்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த பதிவிற்கு பாஜகவினர் மற்றும் இந்து மத நம்பிக்கையாளர்கள் பலர் திமுக தேர்தல் வருவதால் அரசியல் செய்வதற்காக இந்து மத பக்தியை கையில் எடுத்துள்ளார்கள் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.

அதேசமயம் திமுகவினர் “திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி அல்ல. திமுகவில் மத நம்பிக்கை உள்ளவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

அவரவர் நம்பிக்கையை பின்பற்ற அவர்களுக்கு உரிமை உண்டு” என்று கூறி வருகிறார்கள். இந்த பதிவு குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

You may also like
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!

Leave a Reply