Home > அரசியல் > விளக்கேத்த சொன்ன மோடியிடம் சில சந்தேகங்கள்!

விளக்கேத்த சொன்ன மோடியிடம் சில சந்தேகங்கள்!

பத்திரிகையாளர்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பேசாவிட்டாலும், பிரதமர் மோடி வீடியோவிலும் ரேடியோவிலும் மக்களுக்காக நிறைய பேசுகிறார். என்ன ஒரு குறை என்றால், அவர் பேசுவதில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கவே முடியாதபடி காணாமல் போய்விடுகிறார்.

மக்களோடு மக்களாக கலந்து பழகிய பிரதமர்கள் மத்தியில், மக்களை விட்டு ஒதுங்கியே இருந்துகொண்டு மக்களுக்காக உழைப்பதாக சொல்லும் ஒரு பிரதமரை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

விளக்குப் பிடித்தால், விளக்கேற்றினால் ஒரு கொடூரமான தொற்றுநோயை விரட்டிவிடலாம் என்று சொல்லும் ஒரு பிரதமரிடம், சில சந்தேக கேள்விகளை கேட்டால் பதிலா சொல்லப்போகிறார்? இருந்தாலும் கேட்டு வைப்பதில் தப்பில்லையே…

சில நாட்களுக்கு முன், நிதியமைச்சர் நிர்மலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவித்தார். அந்த நிவாரண உதவிகள் சுமார் 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும் என்று அவர் சொன்னார். அவர் சொன்னதிலிருந்து, மத்திய அரசின் உதவிகளை எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு இந்தியாவில் மொத்தமுள்ள 130 கோடி மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கொள்ளலாம். இதை பிரதமரும் ஏற்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.

முழுக்கவும் மின்சாரம் கொடுத்துவிட்டதாக பிரதமர் சொல்லிக்கொண்டாலும், இந்த 80 கோடி பேருக்கு மின்சார இணைப்பே இருக்காது. ஆக அவர்களுடை வீடுகள் அனைத்தும் ஏற்கெனவே இருள் மண்டித்தான் கிடக்கும். அப்படியானால், அந்த மக்கள் தங்கள் வீடுகளில் பிரதமரின் வேண்டுகோளை மதிக்காமல், மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன், தங்கள் வீட்டில் இல்லாத மின்விளக்கை அணைக்கத் தவறியதற்காக தண்டிக்கப்படுவார்களா? அல்லது கண்டிக்கப்படுவார்களா? ஏனெனில், பிரதமர் வலியுறுத்திய ஒற்றுமைக்கு இவர்கள் ஊறுவிளைவிக்கிறார்கள் அல்லவா?

பிரதமர் தனது உரையில் நமது நாட்டில் உள்ள ஏழை சகோதர சகோதரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு, நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அவர்களை நாம் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அப்படியானால், மக்கள் தொகையில் சுமார் 50 கோடிப் பேரில் உள்ள தேசபக்தர்கள், தங்களுக்கு அருளப்பட்ட மின்சார வசதியில் ஓரளவு விட்டுக்கொடுத்து, 80 கோடி ஏழைகளுக்கு இணைப்புக் கொடுக்க உதவுவார்களா? அப்படிச் செய்தால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள இருளை விலக்க உதவியாக இருக்குமே…

அடுத்து, கொரோனா வைரஸை ஒழிக்க பிரதமர் கொடுக்கவுள்ள அதிர்ச்சிகரமான யோசனையின் போது இந்த சந்தேகங்களுக்கான பதிலை சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
நடிகை சித்ரா தற்கொலை புதிய தகவல்கள்
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

Leave a Reply