Home > அரசியல் > ஸ்டாலினை ஒழிக்க சபரீஸனா?

ஸ்டாலினை ஒழிக்க சபரீஸனா?


திமுக எப்போதும் தொண்டர்களின் கட்சியாகவும், தொண்டர்களை குடும்ப உறுப்பினர்களாக கருதும் கட்சியாகவும் வளர்ந்து வந்திருக்கிறது. இப்போதவரை திமுக என்பது குடும்பக் கட்சிதான் என்று அதன் உறுப்பினர்களே வாதாடும் அளவுக்கு தொடர்கிறது.

ஆனால், கலைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபிறகு, ஸ்டாலின் உடல்நிலை குறித்தும், கலைஞருடன் குஷ்புவைக்கூட இணைத்தும் ஒரு வதந்தியை பரப்பிவிட்டார்கள்.

அழகிரியேகூட ஸ்டாலின் சீக்கிரம் சாகப்போவதாக கூறி கலைஞருடன் சண்டை போட்டதாக ஒரு கதையை கட்டிவிட்டார்கள். அதையடுத்தே, அழகிரியை கலைஞர் ஒதுக்கி வைத்தார் என்றார்கள்.

தெலுங்குதேசம் கட்சியை ராமராவ் இருக்கும்போதே அவருடைய மருமகன் ஆக்கிரமித்ததைப் போல, ஸ்டாலின் இருக்கும்போதே திமுகவை ஸ்டாலின் மருமகன் சபரீஸன் ஆட்டையைப் போட முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.

ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என்றும், தனக்குப் பிறகு தனது குடும்பத்திலிருந்து யாரும் திமுகவில் பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் தொலைக்காட்சியிலேயே நேரலையில் அறிவித்தார். இருந்தாலும், ஸ்டாலின் மருமகனின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்திருப்பதையும், ஆளுங்கட்சியின் கமிஷன் அனைத்தும் அவரிடமே செல்வதையும் அவ்வப்போது மீடியாக்கள் தெரிவித்தன. திமுகவினர் ஆளுங்கட்சியுடன் நடத்தும் பேரம் அனைத்திலும் சபரீஸனுக்கு பங்கு செல்வதை மீடியாக்கள் மறைமுகமாகவும், கட்சிக்காரர்கள் நேரடியாகவும் கூறிவந்தார்கள்…

இந்நிலையில், இதுவரை திமுகவின் பிரச்சார பணிகளை கவனித்துவந்த சுனில் விலகிய நிலையில், பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்…

பிரசாந்த் கிஷோருடன் டீலிங் பேசி முடிக்கும் அளவுக்கு ஸாடாலினுக்கு விவரம் போதாது என்ற போதிலும், இந்த டீலிங்கிலும் சபரீஸன்தான் முக்கிய பங்கு வகிக்கிறாரா? அல்லது, உதயநிதியே தனது போக்கில் முடிவெடுத்திருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் திமுகவின் இந்த டீலிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப் படுகிறது…. அதிலும் கீழ்கண்ட பதிவு மிகவும் வைரலாகி வருகிறது…

“எல்லாம் அந்த ஈசன் செயலா? துர்காதேவி செயலா?

திமுக தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று தெரியுமா?

70 ஆண்டுகள் ஆச்சுங்க?

70 ஆண்டு வயதுடைய கட்சிக்கு நேத்து வந்த பாப்பான் வழிகாட்டனுமா?

இல்லிங்க, அவரு பல கட்சிகளுக்கு வெற்றிச்சூத்திரம் சொல்லிருக்காருங்க…

அதாவது, எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்கலாக்கலாம்னு சொல்லிருக்காரு.. அப்படித்தானே…

என்னங்க நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? எப்படியாவது திமுக ஜெயிக்க வேணாமா? அதுக்குத்தானேங்க பிரசாந்த்தை கூப்பிட்டிருக்காங்க…

சரி, இதை உண்மைனு வச்சுக்குவோம்… போன தடவை சுனில்னு ஒருத்தனை கொண்டுவந்து திணிச்சிங்களே அவன் என்ன பண்ணான்..?

திமுகவில் யாரு யாரைப் பார்க்கனும்… யாரு பார்க்கக்கூடாதுனு முடிவு பண்ணான்… அவன் நினைச்சாத்தான் தலைவரையே பாக்க முடியும்னான்… அவனுக்கு புடிச்ச ஆட்கள் சந்திப்பை மட்டுமே பிரபலமாக்கினான்… ஸ்டாலின் மனைவி, மருமகன் ரெண்டு பேருக்கும் பிடிக்காத யாரும் ஸ்டாலினை நெருங்கவே முடியாதுனு வச்சிருந்தான்…

சரி, திமுகவுல தகவல் தொழில்நுட்பப் பிரிவுனு ஒன்னு இருந்துச்சே அது என்னத்தை புடுங்கிச்சாம்… தமிழகம் முழுவதும் வார்டு வாரியா டேட்டா எடுத்துச்சாம். அறிவாலயத்துல அதுக்குனு ஒரு இடம் கொடுத்தாங்க. பிறகு அதை எடுத்துட்டாங்க… பிடிஆர் தியாகராஜன் வெவரமா இருக்காருனு அவரை ஓரங்கட்டினாங்க…

ஆக மொத்தத்துல வெவரமானவன் திமுகவுல இருக்கக்கூடாதுனு யாருய்யா முடிவெடுக்கிறது?

நான் மட்டுமே வெவரமானவன்னு மாமாகிட்ட காட்டுற யாரோதான் இதையெல்லாம் செய்யனும்?

அவரு யாரு சபரீசனா?

70 ஆண்டுகள் திமுக வெற்றி தோல்வினு சந்திச்சாலும் தொண்டர்கள் கவுரவமா இருந்தானுக… கட்சி நிர்வாகிகளும் திமுகவே கதினு கிடந்தாங்க… இப்போ என்னடான்னா கட்சிக்கு யாரு முக்கியம்னு மாவட்டச் செயலாளர் நெனக்கிறாங்களோ அவுங்களையே ஒதுக்கி வக்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க… இதுக்கெல்லாம் காரணம் என்ன?

கட்சியை சரியா வழிநடத்துற ஆற்றல் தலைமைக்கு இல்லைனும் சொல்லலாம்… தலைவரையே சுதந்திரமா பேசமுடியாம, சொல்றதை மட்டுமே பேசுற ரோபாவோ ஆக்கி வச்சிருக்காங்கனும் சொல்லலாம்…

அப்படினா திமுகவினர் இனி பிரசாந்த் கிஷோரின் அடியாட்கள்னு சொல்ல வர்றீங்களா?

தெரியலீங்க, எல்லாம் அந்த ஈசன் செயலா? துர்காதேவி செயலா?”

என்ற சமூக வலைத்தள பதிவு வைரலாகி வருகிறது…

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்
அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!
கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!

Leave a Reply