Home > அரசியல் > எல்லாவற்றையும் கடந்து கட்சி நடத்துவது சும்மாவா?

எல்லாவற்றையும் கடந்து கட்சி நடத்துவது சும்மாவா?

இந்த உலகத்தில் அதிகமாக வசைபாடப்பட்ட ஒரு சமகால தலைவர் உண்டென்றால் அது தலைவர் கலைஞர்தான். தற்போது, தமிழ்நாட்டில் அதிகமாக நக்கல் அடிக்கப்பட்ட தலைவர் மு.க.ஸ்டாலின்.

உலகத்தில் உள்ள கட்சிகளில் அதிகமாய் திட்டு வாங்கிய கட்சி திமுகதான். பூரா பயலும் திட்டுவான்,
ஆரியம் போல் என்று பிராமணர்களை குறிக்கும் என்று அந்த வாக்கியங்களை தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும் போது எடுக்க ஆணையிட்ட போதிலும், பிராமணன் திட்டுவான்.

30 பேரை மலையாள மகோரா மேனன் போலீசை விட்டு கொன்னாலும், அடுத்து வந்த ஆட்சியில் வந்ததும் 20% ஓதுக்கீடு கொடுத்து பிற்படுத்தப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பட்டியலில் சேர்த்து, அதனாலே முன்னேறிய வன்னியன் உள்ளிட்ட 108 சாதிக்காரனும் திட்டுவான்.

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும், பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனைக்காகவோ, முத்தலாக் விவகாரத்தில், சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை எதிர்த்து கருத்துகளை மக்களவை, மாநிலங்களவையில் திமுக சார்பில் பேசினாலும் இசுலாமியன் திட்டுவான்.

பட்டியல் வகுப்பில் படித்த ஜோலார்பேட்டை வரதனுக்கு, அன்று எந்த தலைவரும் கேட்காத போது, பெரியார் சொல்படி நீதியரசர் பதவி கொடுத்து அழகு பார்த்தவரை அதே பட்டியலினத்து நண்பர்களே திட்டுவான், 19 பேர் வரிசையில் இருந்தும் சட்டப்படி உயர்நீதிமன்ற நீதி அரசர் பிற்பாடு, உச்சநீதிமன்ற நீதி அரசராக்கிய பெருமை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று தெரிந்தும் கண்டமேனிக்கு பட்டியலினத்துக்காரனே பெரியாரையும் சேர்த்து திட்டி தீர்ப்பான், படம் எடுத்து வஞ்சிப்பான். கேட்டால் கருத்துரிமை என வியக்கயானம் பேசுவான்.

விவசாய கடனில் தள்ளுபடி செய்தால் அதிமுக காரனே அதிகம் பலன் அடைவான் என்று தெரிந்தும் 7000 கோடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்தால் அதிமுககாரனும் திட்டுறான்.

1983ல் ‘உடன்பிறப்பு’ என்று ஒரே கடிதம் மூலம் ஒரே இரவில் சுமார் 7 லட்சம் பேர் திரண்டு சென்னைக்கு வந்து ஆதரவை வெளிப்படுத்திய திமுககாரனை எதுவுமே அறியாத தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளன் வரிசையாக வந்து திட்டுவான்.

இந்தியாவே திரும்பிப் பார்க்க மதுரை ரேஸ் கோர்ஸில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி டெஸோ மாநாடு நடைபெற்றதை அறியாதவர்கள் இன்று ஈழப்போருக்கு திமுக தான் காரணம் என்று ஈர வெங்காயம் போல புலம் பெயர்ந்த தமிழனும் ஏசுவான், நண்டு சிண்டு எல்லாம் எதிராக பேசுவான்.

80க்கு அப்புறம் பொறந்த பூரா பயலும் முன்னுக்கு வந்த மிக முக்கிய காரணம் சமூக நீதி, ஒரு சில வகுப்பினருக்கும், பணபடைத்தவனுக்கு மட்டுமே கிடைத்த அனைத்து வித கல்வியும், குறிப்பாக மருத்துவம், பொறியியல், இதர கல்லூரி படிப்பு போன்றவை அனைவருக்கும் கிடைத்தது, ஒரே காரணி, கலைஞர் செய்த சமன்பாடு. ஆனால் வெளிநாட்டில் உட்காந்து வெளக்கெண்ண மாதிரி இலவசம் ஒழியனும், only economic backward people/ only merit system தான் என்று அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் எடுத்துக்காட்டு காட்டுவான். அந்த பேமானிங்களுக்கு அங்கெல்லாம் 4 சாதி முறை இல்லை என்பதே தெரியாது. நல்ல நிலையில் உள்ள படித்த தமிழனும் திட்டுவான்.

இவங்களுக்கெல்லாம் கலைஞர் செய்த அனைத்து நன்மைகளும் வேண்டும், ஆனால் திமுக ஆட்சிக்கு மட்டும் வரக்கூடாது? என்ன நியாயமோ உங்க நியாயம்?

எல்லவற்றையும் கடந்து கட்சி நடத்துவது என்னா சும்மாவா?

பிறந்த குழந்தை, முதலில் பேசணும், அப்புறம், நடக்கணும், அப்புறம் படிக்கணும், அப்புறம் வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கணும். இதெல்லாம் ஆனபின்தான் கல்யாணம் பண்ணுவாங்க. யாரும் எடுத்ததுமே முதல் இரவுக்கு சென்று அடுத்த தலைமுறை வளர்க்க ஆசை படமாட்டாங்க.

அந்த குழந்தைப் போல எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்து முன்னேறிய திமுகவை எந்த திராணியும், எந்த கொள்கையும் இல்லாத கட்சிகளோடு ஒன்றுபடுத்துவதை நினைத்தால் ஊடகங்களுக்கு எவ்வளவு பெரிய மூளை இருக்கு.

திமுகவை விமர்சனம் செய்வது கூடாது என்று நான் சொல்லவே இல்லை. அதில் நேர்மை இருக்க வேண்டும். வெறும் திமுகவை பழிப்பது மட்டுமே தொழிலாக பலர் வெறி பிடித்து அலைவதை, நாம் அவர்கள் அறிவு அவ்வளவுதான் என விலகிப்போவது நல்லது. அனாவசியமாக அவர்களை நாமே புகழடைய வைக்கக்கூடாது.

ஏசுநாதரை 13வது சீடன் காட்டி கொடுத்தது போல உங்கள் தேவைகளுக்காக திமுகவை, கலைஞரை, தலைவர் ஸ்டாலினை(தற்போது) புகழ்ந்து, தேவை முடிந்ததும் இப்படி பண்ணி இருக்கனும், அப்படி ஏன் செய்யவில்லை என்று பதிவுகளை போட்டு புளிங்காகிதம் அடைவதை நினைக்கும் போது,

வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா பாணியிலேயே பதில் சொல்லிட்டு போவது சாலச் சிறந்த வழி.
இங்கு திமுக ஆதரவாளனாக இருப்பது ரொம்ப கடினமான ஒரு role.

இணைய உடன் பிறப்புகளுக்கு, கண்டவனுக்கு பல்லக்கு தூக்குவதை இத்தோட நிறுத்திக்கங்க. படமோ படைப்போ அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்து அலசுங்கள். பாராட்டுங்கள். படைப்பாளிகளை புகழ்வது கூட ஒரு வரைமுறையோடு இருப்பது நன்று.

Vote4DMK என்ற குழுவிலிருந்து Arulraj

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!
கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!
மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan

Leave a Reply