Home > அரசியல் > காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்

காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளிகாட்சி மூலமாக பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர்ராஜுவையும், உதயகுமாரையும் பேசி கலகலப்பூட்டினார்.

’’அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் , உதயகுமாரும் தங்களது துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரியாது.

ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவை பேட்டிகள், இன்றைக்கு புதிதாக என்ன தத்துவ முத்துக்கள் உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் பட்டியல் போட்டு சொல்லிவிடுவார்கள்.

வைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ.

குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே.. அதை கல்வெட்டாக எழுதி அவரை அதற்கு பக்கத்தில் உட்கார வைக்கலாம்’’என்று சொல்லி கலகப்பூட்டினார்.

மேலும், ‘’செல்லூர் ராஜூ ஒரு பேட்டி கொடுத்தால் போதும். அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால் பேட்டி கொடுப்பதில்தான் போட்டி.

மதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜூ சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார்..மதுரையின் வளர்ச்சியா? அமைச்சர் பதவியா? என்று கேட்டால், நான் மதுரையின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.

இது உலகமகா நடிப்பு. இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடமும்தான் பார்க்க முடியும்’’என்றார்.

You may also like
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்
அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

Leave a Reply