Home > அரசியல் > 7 பேர் விடுதலையில் ஆட்சேபம் இல்லை” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

7 பேர் விடுதலையில் ஆட்சேபம் இல்லை” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும், குற்றமற்றவர்கள் என்பது உண்மை எனில், அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

மனுநீதி குறித்த திருமாவளவனின் கருத்தில் எந்தவித தவறும் இல்லை என்று தெரிவித்த இளங்கோவன், அது 100 சதவீத உண்மை என்றும், வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக உடனான கூட்டணி என்பது கொள்கைக்கானது என்றும், தேர்தலில் காங்கிரஸிற்கு குறைவான இடங்களே தருவார்கள் என்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

You may also like
அகமது பட்டேல் (71) கொரோனா பாதிப்பால் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தருண் கோகாய் உயிரிழப்பு…
தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ்
தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது; அதற்கு தினேஷ் குண்டுராவ்
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

Leave a Reply