Home > அரசியல் > குலாம்நபி ஆசாத் நீக்கம்காங்கிரஸ் அறிவித்த அதிரடி மாற்றங்கள்

குலாம்நபி ஆசாத் நீக்கம்காங்கிரஸ் அறிவித்த அதிரடி மாற்றங்கள்

காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு காணொலி முறையில் நடந்தபோது, அதற்கு முன்னதாக கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களுக்கு அந்த செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அந்த தலைவர்கள் தங்கள் குறைகளை கட்சி அமைப்பில் கூற வேண்டும், ஊடகங்களில் அல்ல என்று செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தொடர்ந்து குலாம் நபி ஆசாத் ஊடகங்களிடம் பேசிய நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட மாற்றத்தில் குலாம் நபி ஆசாத்தின் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஊடகக் குழுவின் தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் முக்கியமான அம்சம் சோனியாவை மாற்றவும் கட்சியில் தேர்தல் நடத்தவும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆசாத் தவிர, அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரியங்கா காந்தி வாத்ரா உத்தரபிரதேசத்தின் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்,

காங்கிரஸ் காரிய கமிட்டி எனப்படும் தேசிய செயற்குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ப.சிதம்பரம், டாக்டர் செல்லகுமார் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

புதிய செயற்குழு உறுப்பினர்களாக சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ஜிதேந்திரசிங், தாரிக் அன்வர், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, கய்காங்கம், ரகுவீர்சிங் மீனா, தருண் கோகாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளர்களாக திக் விஜயசிங், மீராகுமார், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, கே.எச்.முனியப்பா, பிரமோத் திவாரி, தாரிக் ஹமீத் கரா, பவன்குமார் பன்சால், ரஜனி பாட்டீல், பி.எல்.புனியா, ஆர்.பி.என்.சிங், சக்திசிங் கோஹில், ராஜீவ் சங்கர்ராவ் சதவ், ராஜீவ் சுக்லா, ஜிதின் பிரசாதா, தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லகுமார், எச்.கே.பாட்டீல், தேவேந்திரயாதவ், விவேக் பன்சால், மணிஷ் சத்ரத், பக்தசரண்தாஸ், குல்ஜித்சிங் நக்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் எம்பி ஜோதிமணி காங்கிரஸ் தேர்தல் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி எம்பியும் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமார் ஒடிசா மாநில பொறுப்பாளராகவும், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெலங்கானா மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மேலிடப் பொறுப்பாளராக குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

You may also like
இந்தியாவில் குடும்ப பரம்பரை ஜனநாயக ஆட்சிமுறைதான் தொடருமா? –
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் மீண்டும் தேர்வு
நீட் விவகாரத்தில் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு
காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply