Home > அரசியல் > மோடி பிறந்தநாள் மீன் வழங்கி கொண்டாடிய நடிகை நமீதா

மோடி பிறந்தநாள் மீன் வழங்கி கொண்டாடிய நடிகை நமீதா

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும்,
பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்துகொண்டார். பின்னர் அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கினார்.

இலவச மீன்கள் பெற வந்தவர்கள் நடிகை நமீதாவுடன் ஆர்வமாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். நமீதாவும் பெரிய, பெரிய மீன்களை கையில் ஏந்தி உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தார்.

இதுகுறித்து நமீதா நிருபர்களிடம், பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. எனது கட்சி பாஜக மீனவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்தப் பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி” என்றார்.

You may also like
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு
பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது
சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்

Leave a Reply