Home > அரசியல் > அதிமுக பொதுக்குழு சென்னையில் கூடுகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு சென்னையில் கூடுகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வருகின்றன.

அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட வேண்டும். கொரானா காலம் என்பதால் அதிகமாக கூட்டம் கூடும் என்பதால் அனைத்து நிகழ்ச்சிகளும் தவிர்க்கப்பட்டன.

இதனால் அதிமுகவின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற வில்லை. இதனிடையே திமுக சார்பில் பொதுக் குழுக் கூட்டமானது காணொலி வழியாகவே நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் பொது குழுவுக்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9-ம் தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர்கள் அனைவரும் கொரானா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்டப் பணிகள் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா ஜனவரி மாதத்திற்குள் விடுதலை ஆவார் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply