Home > அரசியல் > மாணவர்கள் மரணங்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த அதிமுக அரசு மு.க.ஸ்டாலின்

மாணவர்கள் மரணங்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த அதிமுக அரசு மு.க.ஸ்டாலின்

இன்று (செப்டம்பர் 14) தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்துக்கு திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்
நீட் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த மாஸ்க் அணிந்து வந்தார்.

கொரானா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளியுடன் சட்டமன்றத்தை நடத்துவதற்காக, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டமன்றம் தொடங்கியது,

இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டமன்றம் முடிந்த நிலையில் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

” கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்ச்சியாக, மறைந்த தலைவர்களுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நான் எழுந்து சபாநாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.

நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ – மாணவிகள், தற்கொலை செய்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. எனவே இந்த இரங்கல் தீர்மானத்தில் அவர்களுடைய பெயர்களையும் சேர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.

இன்னும் 2 நாட்கள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், இந்த இரண்டு நாட்கள் போதாது, நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே அவை குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும், தனித் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அளித்திருக்கிறோம். தொடர்ந்து மேலும் பல தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கோரி நோட்டீஸ் தந்து கொண்டு இருக்கிறோம். எப்படி இந்த 2 நாட்களில் அவற்றையெல்லாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது”என்றார் ஸ்டாலின்.

” நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது?”என்ற கேள்விக்கு, ” அவர்கள் தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றி உள்ளார்கள். சட்டமன்றத்திலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலேயும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு நாடகம்

மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட இதற்காக முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ டெல்லிக்குச் சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ இதுகுறித்து வலியுறுத்தவில்லைபோதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆகவே இது உண்மையிலேயே கூனிக்குறுகி போயிருக்கக்கூடிய அடிமை ஆட்சியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு”என்று கூறினார் ஸ்டாலின்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா

Leave a Reply