இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று (டிசம்பர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும்.
ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்ற தகவலைத் தெரிவித்தார். இந்த நிலையில் முருகனுக்கு அதிமுக தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முருகனின் கருத்து சரியானதல்ல எனவும், முதல்வர் வேட்பாளரை முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார்.
அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா பேசும்போது, அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்றால் முதல்வர் வேட்பாளரை ஏற்க வேண்டும் இல்லையென்றால் கூட்டணி தொடர இயலாது என்றார்
அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க. தலைவர் முருகன் ஏன் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கும் எனக் கூறுகிறார் என புரியவில்லை.
கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் முருகன் பேசினால் பா.ஜ.க. தலைமையே இவரை நீக்க வேண்டும்” என்றார்.