Home > அரசியல் > அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா

அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லம் அருகே அதிமுகவின் கொடியை ஏற்றினார்.

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி , அதிமுக கொடியேற்றி சிறப்பித்தார் .

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் பழனிசாமி. தனது தாயார் தவுசாயம்மாள் மறைவால் சொந்த ஊரில் உள்ள முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி எம்ஜிஆரால் “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” கட்சி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக விளங்கி வருவது கவனிக்கத்தக்கது.

You may also like
முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து
புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

Leave a Reply